நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிக்கு தீ வைப்பு!

லிந்துலை பாமஸ்டன் பகுதியில் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைத்திருந்த லொறியை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக லொறியின் உரிமையாளர் தெரிவிக்கின்றார். இந்தச் சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, பாமஸ்டன் ரட்ணகிரி கிராம பகுதியில் 11.09.2020 அன்று அதிகாலை நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லிந்துலை பாமஸ்டன் ரட்ணகிரி கிராம பகுதியில் வசிக்கும் வீரசேகர பண்டார என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் லொறியே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது. எனினும் 11.09.2020 அன்று காலை வேளையில்… Continue reading நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிக்கு தீ வைப்பு!

மோட்டார் சைக்கிள் விபத்து; முன்னாள் வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர் சாவு!

கோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் இன்று(6) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அல்வாயைச் சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது-63) என்ற வடமராட்சி வலயக் கல்வி அலுவலக முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகரே உயிரிழந்தவராவார். மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். சம்பவத்தில்… Continue reading மோட்டார் சைக்கிள் விபத்து; முன்னாள் வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர் சாவு!

சாவகச்சேரி தனங்கிளப்பு விபத்தில் உயிரிழந்தவர் முன்னாள் பெண் போராளி!

யாழ்.சாவகச்சேரி- தனங்களப்பு- அறுகுவெளி- ஐயனார்கோவிலடியில் இடம்பெற்ற டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் முன்னாள் போராளியான குடும்பப் பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் A32 பிரதான வீதியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய துசாந்தி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். முன்னாள் போராளியான குறித்த குடும்பப் பெண் ஒரு காலை இழந்தநிலையில் செயற்கைக் கால் பொருத்தியுள்ளார். சம்பவம் தொடர்பான… Continue reading சாவகச்சேரி தனங்கிளப்பு விபத்தில் உயிரிழந்தவர் முன்னாள் பெண் போராளி!

டிப்பர் வாகனம், மோட்டார் சைக்கிள் மோதுண்ட விபத்தில் பெண் பலி

சங்குப்பிட்டி வீதியில் டிப்பர் வாகனம், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தனங்கிளப்பு சந்தியில் இருந்து சங்குப்பிட்டி வீதியில் இந்த விபத்து இன்று முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றது. உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை. அவர் ஒரு காலையிழந்த நிலையில் செயற்கை கால் பொருத்தப்பட்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சாவகச்சேரி திசையிலிருந்து பூநகரி திசைக்குப் பயணித்த மோட்டார் சைக்கிளும் எதிர்த் திசையில் வந்த டிப்பருமே மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றது என்று அங்கிருந்து தகவல்கள்… Continue reading டிப்பர் வாகனம், மோட்டார் சைக்கிள் மோதுண்ட விபத்தில் பெண் பலி

வீதியின் குறுக்கே முறிந்து வீழ்ந்த மரம்!! இருவர் பரிதாபச் சாவு; முல்லையில் சம்பவம்

முல்லைத்தீவில் மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் இன்று மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒரு இளைஞன் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார். முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதிகளில் இன்று மாலை வீசிய கடும் காற்றுடன்… Continue reading வீதியின் குறுக்கே முறிந்து வீழ்ந்த மரம்!! இருவர் பரிதாபச் சாவு; முல்லையில் சம்பவம்

வீட்டு முகப்பு இடிந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி! யாழில் சோகம்

யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட சுன்னாகம் அம்பனைப் பகுதியில் வீடு திருத்தத வேலையில் ஈடுபட்ட கட்டட கூலித் தொழிலாளி ஒருவர், கூரைத்தளத்தை உடைக்க முற்பட்ட வேளை சீமெந்திலான முகப்பு கூரை விழுந்ததில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நவாலி கலையரசி லேன் பகுதியை சேர்ந்த அல்ரர் போல் (42) என்ற ஒரு பிள்ளையின் தந்தையாவார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சார சபை ஊழியர்களிற்கு நேர்ந்த பரிதாபம்!! மூவர் பலி!! மூவர் படுகாயம்

எல்ல, வெல்லவாய வீதியின் இராவண எல்லை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை மின்சாரசபையின் பதுளை அலுவலகத்தை சேர்ந்த குழுவொன்று காலியில் நடந்த இறுதி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு விட்டு, பதுளை திரும்பிய வழியில் விபத்து இடம்பெற்றது. இன்று (22) காலை இராவண எல்லை பகுதியில் அவர்கள் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில்… Continue reading மின்சார சபை ஊழியர்களிற்கு நேர்ந்த பரிதாபம்!! மூவர் பலி!! மூவர் படுகாயம்

அதிகாலையில் கோரவிபத்து – ஐவர் ஸ்தலத்திலேயே பலி

ருநாகலை-கொழும்பு சாலையில் வலக்கும்புரா பகுதியில் டிப்பர் டிரக் மற்றும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காரின் சாரதி உட்பட 5 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.எஸ்.பி ஜாலியா சேனரத்ன தெரிவித்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் இக் கோர விபத்து நடந்துள்ளது. ஒரு மரண வீட்டிற்கு சென்று காரில் வலக்கும்புரா நோக்கி திரும்பியவர்களே இவ் விபத்தில் பலியாகியுள்ளனர். விபத்து தொடர்பாக டிப்பரின் சாரதி அலவ்வா போலீசாரால் கைது… Continue reading அதிகாலையில் கோரவிபத்து – ஐவர் ஸ்தலத்திலேயே பலி

16 வயதில் மோட்டார் சைக்கிள்!! அதி வேகத்தால் பலியான சிறுவன்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகநேரியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் 16 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். சுற்றுலா விடுதி வாகநேரியைச் சேர்ந்த நா.ததுஷன் வயது (16) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர், வாகநேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டதன் பின்னர் தமது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணத்த போது மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டினை மீறி பாதையை விட்டு விலகியதில் இவ்… Continue reading 16 வயதில் மோட்டார் சைக்கிள்!! அதி வேகத்தால் பலியான சிறுவன்

மது போதையின் உச்சம்!! கிளிநொச்சி முறிப்பு பகுதியில் கோர விபத்து!! இரு இளைஞர்கள் பலி! ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிப்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரே குறித்த விபத்தில் சிக்கியுள்ளனர். குறித்த பகுதியில் காணப்படும் வீதி வளைவில் வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.   குறித்த விபத்தில் 18 வயது மதிக்கதக்க இரு இளைஞர்கள்… Continue reading மது போதையின் உச்சம்!! கிளிநொச்சி முறிப்பு பகுதியில் கோர விபத்து!! இரு இளைஞர்கள் பலி! ஒருவர் படுகாயம்