19 வயது இளைஞனின் உயிரைப் பறித்த டிப்பர்

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை பகல் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் நாஸர் நஜாத் (19) என்ற இளைஞரே குறித்த வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மாவடிச்சேனை பாடசாலை வீதியில் இருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சமயத்தில் மட்டக்களப்பு பகுதியில் இருந்து பொலனறுவை பகுதிக்கு சென்று கொண்டிருந்த… Continue reading 19 வயது இளைஞனின் உயிரைப் பறித்த டிப்பர்

யாழ். பல்கலை. கிளிநொச்சி வளாகம் முடக்கப்படுகிறது – அங்கு பயிலும் மாணவியின் சகோதரனுக்கு கோரோனா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும் இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொற்றுச் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பரீட்சைகள் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமைபுரியும் கம்பஹாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கிளிநொச்சியில்… Continue reading யாழ். பல்கலை. கிளிநொச்சி வளாகம் முடக்கப்படுகிறது – அங்கு பயிலும் மாணவியின் சகோதரனுக்கு கோரோனா

யாழில் திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய காதலியின் நச்சரிப்பு தாங்காது உயிரை விட்ட காதலன்

யாழில் காதலியின் நச்சரிப்பை தாங்க முடியாமல் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நாவாந்துறை, கொட்டடி பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞனே நேற்று உயிரை மாய்த்துள்ளார். திருமணம் செய்து கொள்ளுமாறு காதலி கொடுத்த நச்சரிப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இவர் சில காலத்தின் முன்னர் வவுனியா விடுதியில் பணிபுரிந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரிந்த யுவதியுடன் காதல் வசப்பட்டார். பின்னர் நாட்டில் நிலவும் கொரோனா தொற்றையடுத்து இளைஞன் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.… Continue reading யாழில் திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய காதலியின் நச்சரிப்பு தாங்காது உயிரை விட்ட காதலன்

யாழில் உயிருக்குப் போராடிய முதியவர்!! சிகிச்சை அளிக்க மறுத்த தனியார் வைத்தியசாலைகள்!!!

யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதி விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்துச் சம்பவத்தில், துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் தலையில் படுகாயமடைந்து, மயக்கமடைந்த நிலையில் முச்சக்கரவண்டி ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகளுக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. உடனடியாக அங்கு நின்ற மக்கள் விபத்தில் சிக்கிய முதியவருக்கு சிகிச்சை அளிக்குமாறு மேற்குறித்த இரண்டு வைத்தியசாலைகளிலும் உதவி கோரியிருந்தனர். இருந்தும்… Continue reading யாழில் உயிருக்குப் போராடிய முதியவர்!! சிகிச்சை அளிக்க மறுத்த தனியார் வைத்தியசாலைகள்!!!

கடனை திருப்பி கேட்டாரா?? யாழில் கத்தி குத்து!! -பட்டப்பகலில் பயங்கரம்

யாழ். வைத்தியசாலை வீதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் குடும்பஸ்தர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள (  வேம்படி சந்திக்கு அருகாமையில் ) மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மீதே கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. s. டினேஸ் ( வயது 41 ) என்பவரே இச்சம்பவத்தில் வயிற்று பகுதியில் கத்தி குத்திற்கு… Continue reading கடனை திருப்பி கேட்டாரா?? யாழில் கத்தி குத்து!! -பட்டப்பகலில் பயங்கரம்

Hand sanitizer பயன்படுத்துவோருக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை!

கொழும்பில் காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தி Hand sanitizer எனும் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய மாலபே, தலாஹேன பிரதேசத்தில் காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தி கிருமிநாசினிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று நுகர்வோர் அதிகாரி சபையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வகையான சுத்திகரிப்பு கிரீமில் ஒரு வகை வண்ண கலவையைப் பயன்படுத்தி கிருமிநாசினி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த கிரீம் வகை 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலாவதியாகியுள்ளது. இந்த கிரீம் வகையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட… Continue reading Hand sanitizer பயன்படுத்துவோருக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை!

சங்குப்பிட்டி பகுதியில் விபத்து! வேட்பாளர்கள் உள்ளிட்ட நால்வரிற்கு நேர்ந்த கதி

சங்குப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வேட்பாளர்கள் இருவர் உட்பட நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை 6.35 மணியவில் இடம்பெற்ற வாகன விபத்தினிலேயே நால்வர் படுகாயம் அடைந்து யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பூநகரி பகுதியில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும், யாழில் இருந்து பூநகரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனமும் சங்குப்பிட்டி பாலத்திற்கு… Continue reading சங்குப்பிட்டி பகுதியில் விபத்து! வேட்பாளர்கள் உள்ளிட்ட நால்வரிற்கு நேர்ந்த கதி

17 வயது மாணவி உயிரிழப்பு!! வன்புணர்விற்கு உட்படுத்திய இளைஞர் கைது

இரத்தினபுரி – பலாங்கொடயில் நபர் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது மாணவி  உயிரிழந்துள்ளார். உறவினர்களின் தகவல்படி, “குறித்த மாணவி உயர் தரம் கற்பதற்கு புதிய பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட இருந்தார். இதன்படி கடந்த 5ம் திகதி புதிய சீருடை தைப்பதற்காக தையல்காரரிடம் சென்றிருந்தார். எனினும், அன்று மாலை வரை மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுயநினைவற்ற நிலையில் 24 வயதுடைய நபருக்கு… Continue reading 17 வயது மாணவி உயிரிழப்பு!! வன்புணர்விற்கு உட்படுத்திய இளைஞர் கைது

வெளிமாவட்ட மீனவர்கள் அதிரடி கைது!! -வடமராட்சியில் சம்பவம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சட்டத்திற்கு மாறான கடற்றொழில் ஈடுபட்ட 13 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 படகுகள் மீட்கப்பட்டதுடன், சட்டவிரோத தொழில் உபகரணங்களும் கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. உடுத்துறை கடற்பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இரவு வெளிமாவட்ட மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையிலேயே நேற்று புதன்கிழமை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் வெளிமாவட்ட மீனவர்களால் சட்டத்திற்கு மாறான கடற்றொழில் ஈடுபடுவதாக… Continue reading வெளிமாவட்ட மீனவர்கள் அதிரடி கைது!! -வடமராட்சியில் சம்பவம்