காலையில் மீட்கப்பட்ட சடலம்! நடந்தது என்ன!?

திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபர் உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஏ.செந்தூரன் 38 வயது என்பவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் கோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கற்பாறையில் விழுந்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் கற்பாறை அருகில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிப்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், திருகோணமலை நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *