வைத்தியர் கார் மோதி தந்தை, மகள் பலி

அனுராதபுரம் -குருணாகல் பிரதான வீதியில் ஷாவஸ்த்திபுர பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் நடந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியும் மருத்துவர் ஒருவர் ஓட்டிய காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வண்டியின் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்த தந்தை, அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் தலாவ பிரதேசத்தை சேர்ந்த 60வயதான A. G. ரன்பண்டா என்ற நபரும் அவரது 28 வயதான  நிரஞ்சனா பிரியதர்சினி என்ற மகளுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *