சிறுவனை மோதி கொன்றுவிட்டு தப்பி ஓடியவர்கள்!? ஓருவர் மாட்டினார்

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் நேற்று (13.09) இரவு இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கிசென்ற மோட்டார் சைக்கிள் நொச்சிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த எழில்ராசா.புவிதன் (வயது14) என்ற மாணவன் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இவர் புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்று வருகிறார். சடலம் தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்ததாகவும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடியதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவக்கின்றதுடன் மேலும் அவர்கள் மது போதையில் இருந்ததாகவும் அறியமுடிகிறது.

எனினும் விசாரணைகளின் பின்னரே போதையில் இருந்தனரா என்று கூறமுடியும் என பொரிஸார் தெரிவிப்பதுடன் இது தொடர்பாக மோட்டார்சைக்கிளில் பயணித்த ஒரு இளைஞன் கைது செயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *