கடலில் நீராடி காணாமல் போன இளைஞர்கள் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு – கம்பல்தொட பகுதியில் கடலில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த தலவாக்கலை மற்றும் பதுளைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இன்று சடலங்களாக மீட்க்கப்பட்டுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்கொழும்பு – கம்பல்தொட கடற்பகுதியில் கடலில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மூவர் நீரிழ் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு – தங்கொட்டுவ பகுதியில் தொழிற்சாலை… Continue reading கடலில் நீராடி காணாமல் போன இளைஞர்கள் சடலமாக மீட்பு

சாரதிக்கு ஏற்பட்ட மயக்கம்!? யாழில் இருந்து வவுனியா சென்ற அரச பேருந்து விபத்து

முல்லைத்தீவு மாங்குளம் சந்தி பகுதியில் போக்குவரத்து சபை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற அரச பேருந்தானது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியின் ஓரேத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய அம்புலன்ஸ் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றுடன் மோதியதுடன் அருகிலிருந்த பாலத்துடன் மோதியும் விபத்துக்குள்ளானது. பஸ் சாரதிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதன் விளைவாக இந்த அனர்த்தம் ஏற்றபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறெனினும் விபத்தில் காயமடைந்த… Continue reading சாரதிக்கு ஏற்பட்ட மயக்கம்!? யாழில் இருந்து வவுனியா சென்ற அரச பேருந்து விபத்து

திருத்தப்படாத வீதிகள்!!  தடம்புரண்ட பேருந்து– மாணவர்கள் உட்பட 49 பேர் வைத்தியசாலையில்

டயமகவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று டயகம அட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹட்டன் பகுதிக்கு சென்ற குறித்த பஸ் இன்று (2) காலை 7 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 49 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து… Continue reading திருத்தப்படாத வீதிகள்!!  தடம்புரண்ட பேருந்து– மாணவர்கள் உட்பட 49 பேர் வைத்தியசாலையில்

வைத்தியர் கார் மோதி தந்தை, மகள் பலி

அனுராதபுரம் -குருணாகல் பிரதான வீதியில் ஷாவஸ்த்திபுர பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் நடந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டியும் மருத்துவர் ஒருவர் ஓட்டிய காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வண்டியின் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்த தந்தை, அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் தலாவ பிரதேசத்தை சேர்ந்த 60வயதான… Continue reading வைத்தியர் கார் மோதி தந்தை, மகள் பலி

குறுக்கால் பாய்ந்த நாய்களால் நேர்ந்த விபரீதம்!! பரிதபமாய் பலியான சாரதி!! CCTV

திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று 26/09/2020 (சனிக்கிழமை) இரவு, 9.33 மணியளவில் திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள பல நோக்கு கூட்டுறவு சங்க சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அதி வேகமாக வந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியின் குறுக்காக சென்ற நாய் மீது மோதி நிலை குலைந்து, எதிரே அதி வேகமாக வந்த அதி சொகுசு வாகனத்துடன் மோதியதால் தூக்கி… Continue reading குறுக்கால் பாய்ந்த நாய்களால் நேர்ந்த விபரீதம்!! பரிதபமாய் பலியான சாரதி!! CCTV

மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயமாக அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்களில் ஒருவர் பலி

வேகமாக மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயமாக சென்ற இளைஞர் குழுவின் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் இன்று (25) இடம்பெற்றது. இதன் போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இன்றி வேகமாக சென்ற இளைஞர் குழுவில் ஒருவர் உயிரிழந்ததுடன் இவ்வாறு உயிரிழந்தவர் நிந்தவூர் 4ம் பிரிவைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க நஜாத் என அடையாளம் காணப்பட்டார். இவ்விபத்தானது உயிரிழந்த நபர் தனது நண்பருடன்… Continue reading மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயமாக அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்களில் ஒருவர் பலி

5 மாடி கட்டிடம் தீக்கிரை!! பற்றி எரிந்த உணவகம்

பண்டாரவளை நகரில் சென்ஜோசப் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டிடத்தொகுதியில் இன்று மாலை 4.15 அளவில் தீ பரவல் ஏற்றபட்டது இதன்போது குறித்த தீ விபத்தில் கெமிகெதர உணவகம் முற்றாக தீக்கிரையானது. இதையடுத்து தீயை கட்டுபாட்டுக்கு கொண்டு வருவதற்காக பண்டாரவளை நகரசபை தீயனைப்பு அதிகாரிகளும் பண்டாரவளை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர் இந்நிலையில் பண்டாரவளை பொலிசார் குறித்த தீ விபத்து தொடர்பில் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளைஞன் பரிதாப மரணம்!

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மன்னவாகினி ரயிலுடன் இளைஞன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யோகேந்திரன் அஜந்தன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த இளைஞன் அந்தப் பகுதியில் நீண்ட நேரமாகக் கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் என்று அந்தப்… Continue reading கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளைஞன் பரிதாப மரணம்!

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

(செய்தி – க.கிஷாந்தன், ஹட்டன் கே.சுந்தரலிங்கம்) நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளிகம பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் அட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும், பொகவந்தலாவையிலிருந்து அட்டன் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக பஸ்ஸும் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில்… Continue reading இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

சிறுவனை மோதி கொன்றுவிட்டு தப்பி ஓடியவர்கள்!? ஓருவர் மாட்டினார்

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் நேற்று (13.09) இரவு இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கிசென்ற மோட்டார் சைக்கிள் நொச்சிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த எழில்ராசா.புவிதன் (வயது14) என்ற மாணவன் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில்… Continue reading சிறுவனை மோதி கொன்றுவிட்டு தப்பி ஓடியவர்கள்!? ஓருவர் மாட்டினார்